80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன், உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!!

22 September 2020, 12:21 pm
Quick Share

திருப்பூர் :திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையத்தைச் சேர்ந்தவர் சேவியர்40. கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி குணவதி மற்றும் இரண்டு மகள்களும் ஜோவின் 8 என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜோவின் கால் தவறி அங்குள்ள 80 அடி ஆழம் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பல்லடம் காவல்நிலையம் மற்றும் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர்,அப்பகுதியினர் உதவியுடன் இணைந்து இரண்டு மணிநேரப் போராட்டத்திற்க்குப் பின்னர் அச்சிறுவனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து உடலில் லேசான காயங்களுடன் இருந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

விரைந்து செயல்பட்டு கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

Views: - 1

0

0