பட்டாசு கடை வெடி விபத்தில் தொடரும் சோகம் : சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பலி..!!

Author: kavin kumar
29 October 2021, 10:36 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்தையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்து சிதறியது, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகிலிருந்த பேக்கரியில் பரவியதையடுத்து பேக்கரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் தீயின் வேகம் அதிகரித்தது. இதில் பட்டாசு கடையில் வேலை பார்த்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை சேலம், புதுச்சேரி மருத்துவமனைக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாணாபுரத்தை சேர்ந்த பாலு மகன் சஞ்சய் (14) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 281

0

0