குடும்பத் தகராறில் தம்பியை வெட்டிப்படுகொலை செய்த அண்ணன்!

22 October 2020, 10:37 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே அண்ணன் தம்பியை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் அடுத்துள்ள கொண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கும் இவரது தம்பி சுரேஷ்க்கும் அடிக்கடி குடும்பத்தகராறில் சண்டை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் இன்றும் இவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியதில், சுப்பிரமணியனை அவரது தம்பி அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடூவூர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை செய்ய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அண்ணன் தம்பியை வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 36

0

0