உயிரோடு இருந்த அண்ணனை பிரீசர் பாக்ஸில் பூட்டி வைத்த தம்பி : ‘‘ப்ரீஸ்‘‘ ஆக வைத்த சம்பவம்!!

14 October 2020, 10:46 am
Freezer - Updatenews360
Quick Share

சேலம் : உயிரோடு இருந்த முதியவர் ஒருவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இறந்ததாக கூறி விடிய விடிய சாகும்வரை காத்திருந்த தம்பியின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி கந்தம்பட்டியில், பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் பலசுப்ரமணிய குமார் (வயது 78). அவருடைய சகோதரர் சரவணன்(வயது 70) மற்றும் சகோதரியின் மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கீதா உடல் நிலை பாதிப்பு காரணமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலசுப்பரமணிய குமார் (வயது 78) இறந்து விட்டதாக கூறி நேற்று குளிர்சாதனப் பெட்டிக்காக அவருடைய சகோதரர் சரவணன் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து குளிர்சாதனப்பெட்டி பணியாளர்கள் சம்மந்தப்பட்ட சரவணன் வீட்டிற்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துவிட்டு மறுநாள் வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர்.

அதன்படி செவ்வாய்கிழமை மதியம் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கும் போது முதியவர் குளிர்சாதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உயிரோடு இருப்பது தெரியவந்ததையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் காவல்துறையினர் குளிர்சாதன பெட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்பரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்சை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் பாலசுப்ரமணிய குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை இறந்துவிட்டதாக கூறி குளிர்சாதனப் பெட்டியை வரவழைத்து, பெட்டிக்குள் அவரை வைத்து மூடி உள்ளனர். பாலசுப்ரமணிய குமார் ஹீண்டாய் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் நேற்று உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரது சகோதரர் அவரை குளிர்சாதன பெட்டியில் வைத்து இறந்ததாக கூறி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் குளிர்சாதனைப்பெட்டி எடுக்க வந்த தொழிலாளர்கள், அவர் உயிரோடு இருப்பதாக கூறி, கேள்வி எழுப்பியபோது, அவர் ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை, அதனால் தான் அவரது உயிர் பிரியும் வரை உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளோம், இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவார் என்று கூறி அவர்களை திரும்பி அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து 108 ஊழியர்களை வர வைத்து அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உயிர் உள்ளது என தெரிய வந்ததை அடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலசுப்பிரமணிய குமார்ருக்கு வலிப்பு நோயால் பாதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடைத்து, இறந்துவிட்டதாக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 47

0

0