ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மீன் வியாபாரி கொலை செய்த சம்பவம் குறித்து மனைவி, மகள் மற்றும் மகளின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகர் (வயது 42). இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சலைத்ராணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீடு அருகில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற கார்த்திக் (வயது 24) என்பவர் மரப்பட்டறை வைத்துள்ளார். இதில் சலைத்ராணிக்கும், கார்த்திக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஞானசேகரின் 16வயது மூத்த மகள் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அச்சங்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்தது மீன் வியாபாரி ஞானசேகர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஞானசேகரை கொலை செய்ய அவரது மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் கார்த்திக் மூன்று பேரும் திட்டம் போட்டுள்ளனர்.
நேற்று இரவு ஞானசேகர் தூங்கியதும். அவரது மகள் தனது காதலன் கார்த்திக்கு தந்தை உறங்கி விட்டார் வீட்டுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து கார்த்திக்கும் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஞானசேகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் காட்டுப் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கார்த்திக் என்ற கருப்பசாமி, சலைத்ராணி மற்றும் அவரது மகள் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை மனைவி மற்றும் மகள், மகளின் காதலன் சேர்ந்து அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.