தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநாட்டு திடலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவும் பணி நடைபெற்று வந்தபோது, எதிர்பாராத விதமாக கிரேனின் பெல்ட் திடீரென அறுந்தது.
இதனால், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இன்னோவா கார் மீது கொடிக்கம்பம் விழுந்ததால், அந்த கார் சுக்கு நூறாக நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த எதிர்பாராத விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சேதமடைந்த இன்னோவா காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என த.வெ.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கார் சுக்குநூறாக உடைந்ததும், உரிமையாளர் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விபத்து மாநாட்டு பணிகளில் தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.