விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்.. ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 1:19 pm
RN
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. குழு நாளை சந்திக்கிறது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு கவர்னரை சந்திக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் தொடர்பாக பா.ஜ.க குழுவினர் இன்று கவர்னரை சந்தித்து இருந்தனர். மேலும் பா.ஜனதாவும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது.

Views: - 168

0

0