தி சென்னை மொபைல்ஸ்-ன் ‘டிஜிட்டல் ஹப்‘ : 100 வது கிளையை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்து வைத்தார்!!

By: Udayachandran
25 October 2020, 7:13 pm
Chennai Mobile SP vElumani - Updatenews360
Quick Share

கோவை : தி சென்னை மொபைல்சின் நூறாவது கிளையான டிஜிட்டல் ஹப்பை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.

கோவை 100 அடி சாலையில் தி சென்னை மொபைல்சின் 100 – வது புதிய கிளையாக டிஜிட்டல்ஹப் எனும் மொபைல் போன்களுடன் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழாவில் புதிய ஷோரூமை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ஷோரூமில் மொபைல் போன்களுடன்,அனைத்து வகை முன்னனி பிராண்டுகளின் ஸ்மார்ட் எல்.இ.டி மற்றும் தொடுதிரை டிவிக்கள், லேப்டாப்கள் மற்றும் வாசிங் மெசின்கள் உட்பட வீடுகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் சிறந்த தள்ளுபடி ஆபர்களுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தி சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி கூறுகையில் , கடந்த 2003 – ம் ஆண்டு கோவை கிராஸ்கட் ரோட்டில் தி சென்னை மொபைல்ஸ் முதலாவது ஷோரூம் திறக்கப்பட்டதாகவும், . தற்போது கோவை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வர்த்தகம் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும்,குறிப்பாக இந்த நூறாவது டிஜிட்டல்ஹப் ஷோரூமில் – மொபைல் போன்களுடன் வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்யப்படுவதுடன், திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Views: - 55

0

0