தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம், கடப்பள்ளி பஞ்சாயத்து, சிவபுரத்தில் குப்பம் – பலமநேர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி புதிதாக வீடு கட்டி இன்று கிரகப்பிரவேசம் செய்து குடி ஏறினார்.
தொடர்ந்து வெற்றியை வழங்கி வரும் குப்பம் தொகுதி மக்களிடம் தேர்தல் நேரத்தில் மட்டுமே வரும் சந்திரபாபு நாயுடு சொந்தமாக ஒரு வீடு கூட வைத்துக் கொள்ளவில்லை வெற்றி பெற்றால் அவர் ஐதராபாதிலோ அமராவதிக்கோ சென்று விடுவார் என்று ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதையும் படியுங்க: வாய்ப் புண் சிகிச்சைக்காக வந்த சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு முன்பே தனது சொந்த வீட்டை குப்பத்தில் கட்ட தொடங்கி இன்று கிரகபிரவேசம் செய்தார். இதேபோல் ஆந்திர தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள அமராவதியிலும் சொந்த வீடு கட்ட கடந்த மாதம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
குப்பத்தில் நடைபெறும் வீட்டின் கிரகபிரவேசத்திற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு நேற்று இரவு டெல்லியில் இருந்து நேரடியாக பெங்களூர் வந்து பெங்களூரில் இருந்து குப்பம் வந்தார்.
இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடு அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் அமைச்சர் நாரா லோகேஷ், மருமகள் நாரா பிராமினி ,பேரன் தேவான்ஷ் ஆகியோருடன் புதிய வீட்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று பசு மாட்டிற்கு பூஜை செய்து பால் காய்ச்சி குடியேறினர்.
முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுவின் கிரகபிரவேசம் காரணமாக குப்பம் முழுவதும் திருவிழா போன்று உள்ளது. அந்த தொகுதி மக்களுக்காக சந்திரபாபு நாயுடு தரப்பில் 30 ஆயிரம் பேருக்கு பிரம்மாண்டமான விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு மனைவி நாரா புவனேஸ்வரி தனது எக்ஸ் பக்கத்தில் குப்பம் எங்கள் வீடு, குப்ப மக்கள் எங்கள் குடும்பம். குப்பத்தில் நடந்த கிரகபிரவேசம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இது ஒரு இதயப்பூர்வமான கொண்டாட்டம்.
36 ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவாக இருந்தும் ஒவ்வொரு அடியிலும் எங்களை வழிநடத்தி வரும் குப்பம் மக்களின் ஆசீர்வாதம். அவர்களின் அன்பு, ஆசீர்வாதம் மற்றும் பாராட்டுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை…
இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான…
96 பார்ட் 2 கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்கள்…
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமீப காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. இன்று ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து…
மன்னிப்பு கேட்க முடியாது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது…
திடீர் மரணம் பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஜேஷ். அதனை தொடர்ந்து “அந்த…
This website uses cookies.