விவசாயிகளுக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் புகுந்த சி.பி.எம் கட்சியினர்

1 December 2020, 2:56 pm
Quick Share

கோவை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அங்கு வந்த கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் புகுந்து போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்தனர்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0