திருமணமாகி 6 மாதத்தில் மனைவி எடுத்த முடிவு : வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞர் எடுத்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2021, 4:14 pm
New Married Husband Dead - Updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 31). கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணமாகி 6 மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்துடன் நவீன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதுபோதையில் தனது தாயிடம் பணம் கேட்டதாகவும்,அவர் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்த நவீன் இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை வெகுநேரமாகியும் நவீன் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காரமடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்த பொழுது நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து சடலத்தை மீட்ட காரமடை காவல் துறையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 285

1

0