சுற்றுலா தலங்கள் திறப்பு எப்போது..? விரைவில் அறிவிப்பு..!

6 September 2020, 2:40 pm
Quick Share

மத்திய அரசு அனுமதி அளித்த பின் சுற்றுலா தலங்களைத் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பொது முடக்கத்தில் மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் 4ஆம் கட்ட தளர்வு மாநிலங்கள் வாரியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ.பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறுகட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சுற்றுலா தலங்களை நந்பி பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகியுள்ளது. மட்டும் இன்றி அரசின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இது குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல் அளித்துள்ளார். அதில், மத்திய அரசு அனுமதி அளித்த பின் சுற்றுலா தலங்களைத் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 5

0

0