நாங்க அப்பவே சொன்னோம்… தேர்தல் அறிக்கையில் சொன்ன மற்றொரு பொய்யை பொய் என திமுக ஒப்புக்கொண்டுள்ளது : அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 9:29 pm
Madurai Annamalai - Updatenews360
Quick Share

மதுரை : உளவு துறையில் 50 ஆண்டுகள் பணியில் இருந்த ஆளுநரின் கருத்தை அரசியாலக்க கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நேரடியாக திமுகவுக்கு வாக்களித்தனர்.

பழைய பென்சன் திட்டத்தை பாஜக ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது என கூறினோம். நாங்கள் சொன்னதை தான் தற்போது நிதியமைச்சர் சட்ட பேரவையில் சொல்லியுள்ளார்.

இன்று திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன மற்றொரு பொய்யை பொய் என்று சட்டப்பேரவையில் ஒத்துக்கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு, ஆழப்புழா பாலக்காடு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில்நடந்த 66 கொலைகள் நடந்துள்ளது. கடந்த மாதம் நடந்த 2 கொலைகளில் பிஎப்ஐ நேரடியாக சம்பந்தப்பட்டு உள்ளது. தமிழக கவர்னர் பேசியது அவரின் உளவுத்துறை அறிவில் பேசி உள்ளார்.

கடந்த 50 ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஒருவர் அவ்வாறு பேசி உள்ளார். இதனை அரசியல் ஆக்க கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார்.

கோல் இந்தியாவின் 2.2டன் நிலக்கரி உள்ளது. நிலக்கரி தமிழகத்திற்கு கூடுதல் தேவை உள்ளது. அதை சமாளிக்க முடியவில்லை என கூறுகின்றனர். தமிழக அரசு கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கோல் இந்தியாவை பொறுத்தவரை குறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 3 யூனிட் பராமரிப்பில் உற்பத்தி செய்தால் 1100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். எனவே கோல் இந்தியாவில் பற்றாக்குறை எனச்சொல்வது மற்றும் ஒரு பொய்.

தற்போது மின்தடையை சீராக்க யூபிஎஸ் தேவை. இனி தமிழ்நாட்டுக்கு ஜெனரெட்டேர். வரும் காலத்தில் ஒரு ஒரு வீட்டிலும் நாமே மின்சாரத்தை தயார் செய்யும் நிலை உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Views: - 841

0

0