வாக்குறுதிகளை நிறைவேற்றுதற்குள் திமுக ஆட்சியே முடிந்துவிடும் : அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 4:28 pm
Madurai Anbumani - Updatenews360
Quick Share

ஆன்லைன் சூதாட்டத்தில் ஆளுநர் கையெழுத்து விடாதால் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று மதுரையில் தென் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு பங்கேற்க வந்துள்ளேன். பொதுவாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாத மாவட்டங்களாக உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெற்றால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.

இதை மத்திய மாநில அரசுகள் இணைந்து தென் தமிழகத்தை வளர்ச்சி பெற ஏதுவாக தமிழ்நாடு தென் மண்டல தொழில் ஆணையத்தை தொடங்க வேண்டும்.

அதில் ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை முதன்மைச் செயலாளராக நியமித்தால் இப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை 2015ம் ஆண்டுஅறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 2019 ம் ஆண்டு ஜப்பான் ஜெய்கா நிறுவன நிதி உதவியுடன் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் இன்று வரை ஜெய்கா நிறுவனத்தில் நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதனால் மத்திய அரசு அதற்கான நிதியை மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க வேண்டும்.

மதுரையோடு அறிவிக்கப்பட்ட நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது பணியை தொடங்கி இருக்கிறது ஆனால் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணி தொடங்கப்படாமல் உள்ளது.

பாஜக ஆளுகிற மாநிலத்திற்கு மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் மதுரை எய்ம்ஸ்க்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2008 – 2009 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அறிவிக்கப்ட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் வைகை அணை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் வைகை நீர் வரத்து பகுதியான மேகமலை, வெள்ளிமலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மதுரை வைகை ஆற்றில் 72 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்தார்.

மதுரை நகரத்திற்கு ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரிகளை உருவாக்கி மழை நீரை சேமிக்கும் வழி வகை செய்ய வேண்டும். இதேபோல் காவிரி, தாமிரபரணி, நம்பியாறு சீரமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு நின்று போய் உள்ளது அதையும் விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் .

ஆன்லைன் ரம்மி தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு மூலம் தமிழ்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து செய்து கொண்டுள்ளார்கள். இதனை தடுக்க வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் பாமக போராட்டம் நடத்தியதால் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார்.

தற்போது திமுக அரசிடமும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய பலமுறை கோரிக்கை விடுத்து திமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தனர் .சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கையெழுத்திட ஆளுநரிடம் அனுப்பப்பட்டும் ஆளுநர் மறுப்பது ஏன் என்று புரியவில்லை.

ஆளுநர் ஏன் கையெழுத்திட மறுக்கிறார் என்று தெரியவில்லை தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றியதற்கு பின்பு பத்துக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தமிழக ஆளுநரே பொறுப்பு என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

தமிழகத்தில் கஞ்சா, அபின்உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல்வரை சந்தித்து பலமுறை நேரில் வலியுறுத்தி உள்ளேன்.

இதற்கு முதல்வர் மாதந்தோறும் போதை பொருள் தடுப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்ப்பவர்களை பிடிப்பதை விட சப்ளை செய்பவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு வடிவில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது ஏற்கனவே மதுவில் தமிழகம் மூழ்கியுள்ளது மதுவால் இந்த தலைமுறையை காப்பாற்ற முடியாவிட்டாலும் அடுத்த தலைமுறையை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணியில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும்

Views: - 361

0

0