ஒத்தைக்கு ஒத்த வரியா : சீறிய காளையை பார்த்து பின்வாங்கிய யானை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2021, 11:26 am
Elephant Fear- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கர்நாடக வன பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு, யானையை எதிர்த்து ஜல்லிகட்டு போல் சீறியகாட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் மலைவாழ் மக்கள் கால்நடைகளை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். இரு மாநில எல்லையான புளிஞ்சூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்ற கிராமவாசி தனது பதிமூன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

கர்நாடக வன பகுதியில், புதரின் நடுவில் ஆண் யானை நிற்பதை மாதேஷ் பார்த்ததும் கால்நடைகளை திருப்பி அழைத்து சென்றார். இதில் ஒரே ஒரு மாடு மட்டும் யானையை எதிர்த்து சண்டை போட தயாரானது.

தனது கால்களால், நிலத்தை கீறி, புழுதி கிளப்பியது. மாடு தனது கோபத்தை காட்டி, ஜல்லிகட்டு காளை போல், ஆண் யானையை எதிர்த்து போராட தயாரானது. மாட்டின் சீற்றத்தை அறிந்த யானை, பின் வாங்கி வனப்பகுதிக்குள் ஒடியது.

இந்த சம்பவத்தை மேய்க்கும் தொழிலாளி மாதேஷ் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளது தற்போது வைரலாகி வருகிறது. வனத்தின் மிகப்பெரிய விலங்கை மாடு எதிர்த்து நின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 292

0

0