முடிவுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு : இயல்பு நிலைக்கு திரும்பிய ஞாயிறு கிழமை..!

6 September 2020, 9:59 am
Quick Share

ஞாயிறு கிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்ஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டது.

அதேவேளையில் ஜூலை மாதத்தைப் போலவே அனைத்து ஞாயிறு கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய அரசு தற்போது நாடு முழுவதும் 4ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை பின்பற்றி தமிழக அரசும் மாநிலம் முழுவதும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த சூழலில், ஞாயிறுகளில் கடைபிடிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.

இதனால், இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இயல்பான நிலை திரும்பியுள்ளது. இறைச்சிக் கடைகள், மீன் மார்கெட், காய் கறி சந்தைகள் உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொற்றின் வீரியத்தை புரிந்துகொண்டு பொதுமக்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Views: - 11

0

0