நிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
25 November 2020, 11:05 pmசென்னை: நிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நிவர் புயல் இரவு 10.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் அறிவித்துளளார். புயலின் கண் பகுதி அதிகாலை 3 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறியுள்ளார். மேலும் சென்னையில் கன முதல் மிக கனமழை தொடரும். சென்னையில் இதுவரை 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.