உசுரோடஇருக்கு மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ‘தந்தை’: தேனியில் ‘பரபரப்பு

4 September 2020, 10:26 pm
Quick Share

தேனி: காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகளை இறந்துவிட்டதாக கூறி பெற்ற தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு செல்வி என்ற மனைவியும் கீர்த்திகா என்ற மகளும் உள்ளனார். இவர் வேலை காரணமாக பெங்களூரில் தங்கி கொண்டு குடும்பத்துடன் அங்கேயே வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கீர்த்திகாவிற்கு தேனி மாவட்ட பகுதிகளில் மாப்பிள்ளை பார்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். முடிவாக தேனி அருகே பண்ணைபுரத்தில் மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து கல்யாண வேலைகளை பார்ப்பதற்காக சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக நகை மற்றும் ஜவுளி பொருட்கள் வாங்கி கொண்டு கல்யான வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டு தங்கள் குடும்பத்தினருக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். புதன்கிழமை அன்று திருமணம் என்ற நிலையில் சனிக்கிழமை காலையில் பால் வாங்குவதற்காக வெளியில் சென்ற மகளை வெகுநேரமாகியும் காணவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் மகளை தேடி வந்த நிலையில், வெகுநேரமாகியும் தேடியும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கீர்த்திகாவை தேடும் பணியில் ஈடுபட்ட போது வேறொருடன் நீண்டகாலமாக காதலித்து தற்பொழுது திருமணம் செய்ததாக தெரிய வந்தது. இரண்டு நபர்களும் மேஜர் என்பதினால் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கீர்த்திகா கூறியுள்ளார். இதனை அறிந்த கிருத்திகாவின் தகப்பனார் தங்கள் கிராமத்துக்கு வந்து மகள் உயிருடன் இருக்கும் பொழுது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அப்பகுதி முழுவதும் ஓட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெற்ற மகளுக்கு உயிருடன் இருக்கும் பொழுது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 6

0

0