இன்றுடன் இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்வு : நாளை மறுநாள் மீண்டும் தேர்தல் களம் காணும் வேளச்சேரி!!

15 April 2021, 7:14 pm
Velachery Election -Updatenews360
Quick Share

சென்னை : வேளச்சேரி மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இன்று பிரச்சாரம் ஓய்ந்தது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு வி.வி.பேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அந்த விவிபேட் இயந்திரம், 50 நிமிடம் பயன்பாட்டில் இருந்தகாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இதனால் வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அப்பகுதியில் மட்டும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Views: - 14

0

0