இன்று முதல் தொடங்கியது புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்: ஐடி கார்டு இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை

By: S
5 October 2020, 8:19 am
chennai train - updatenews360
Quick Share

சென்னை: அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் சேவை இன்று முதல் தொடங்கியது.

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் சேவை இன்று காலை முதல் தொடங்கியது.

மேலும், அடையாள அட்டை இல்லாதவர்கள், பொதுமக்கள் பயணிக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய 2 வழிதடங்களில் 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 12 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதையடுத்து இன்று 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

Views: - 45

0

0