கோவையில் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் வந்தாச்சு : லேசர் புரொஜக்சனுடன் துல்லியமாக பார்க்கலாம்!!

11 January 2021, 4:15 pm
Miraj Theatres - Updatenews360
Quick Share

கோவை : கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சேலர் புரெஜக்சனுடன் எஸ்.ஆர்.கே-மிராஜ் என்ற புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் துவங்கப்படுள்ளது.

ஒண்டிப்புதூர் பாலம் அருகே எஸ்.ஆர்.கே-மிராஜ் என்ற புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் துவங்கப்பட்டுள்ளது. மிராஜ் சினிமாஸ் மற்றும் கற்பகம் திரையங்கம் ஒன்றிணைந்து இந்த புதிய திரையரங்கை திறந்துள்ளன.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. அப்போது மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் அமித் சர்மா, கற்பகம் திரையரங்க நிர்வாக இயக்குனர் சிவப்பிரகாசம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிப்போயிருந்த திரையரங்க தொழில் தற்போது வெளியாக உள்ள நடிகர் விஜயின் மாஸ்டர் படம் மூலமாக புத்துயிர் பெறும். இந்த திரையரங்கில் கோவையில் எந்த திரையரங்கிலும் இல்லாத லேசர் புரெஜக்சன் மூலம் படங்கள் திரையிடப்படுகிறது.

இதனால் துல்லியமான ஒலிப்படத்தை பார்க்க முடியும். இங்கு மொத்தம் 5 திரையங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக 1257 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 220 கார்களை நிறுத்தும் அளவுக்கு பிரம்மாணடமான பார்க்கிங் வசதி உள்ளது. தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் படங்கள் திரையிடப்பட உள்ளன. அடுத்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த திரையரங்கம் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Views: - 5

0

0