ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,000 கன அடியாக குறைவு…!!

25 October 2020, 7:08 pm
hoke - updatenews360
Quick Share

ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடி வீதம் குறைந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது.

இந்நிலையில், தற்போது மழையின் அளவு குறைந்த காரணத்தினால் நீரின் வரத்தும் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று வினாடிக்கு 20 கனஅடி வீதமாக இருந்த நீர்வரத்து, 17 கனஅடியாக குறைந்துள்ளது.

இருந்தபோதிலும், ஐந்தருவி,மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகை புரிந்துள்ளனர்.

Views: - 39

0

0