கூடா நட்பு கேடில் முடிந்தது : முன்னாள் ரவுடியை கொலை செய்த நண்பர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2021, 2:49 pm
Murder -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ரவுடியை நண்பர்களே முன்விரோதம் காரணமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த தாயார்குளம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சூளை கருப்பன் என்ற வடிவேலு (வயது 35). இவர் தற்போது கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவி 2 பிள்ளைகள் உள்ளது.

வடிவேல் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனைவி தனது குழந்தைகளை அழைத்து தாய் வீட்டுக்கு சென்று விட்டனர். எம்ஜிஆர் நகர் பகுதியில் தனியாக உள்ள வடிவேலு அவ்வப்போது குடித்துவிட்டு ரவுடிசம் செய்வது வாடிக்கை.

வடிவேல் மீது 2006 ஆம் ஆண்டில் ஒரு கொலை வழக்கும் மற்றும் அடிதடி போன்ற வழக்குகளும் உள்ளது. முன்னாள் ரவுடியான வடிவேலுவை மண்டபம் தெரு பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் தாயார் குளம் பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் சிறையில் சந்தித்து நட்பு ஏற்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் வடிவேலுக்கும் செல்வத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன் விரோதம் காரணமாக வடிவேலுவை செல்வம் கத்தி எடுத்து தலையின் பின்புறத்தில் பலமாக வெட்டியதில், வடிவேலு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

கொலை செய்துவிட்டு வீட்டில் பதுங்கியிருந்த செல்வம் மற்றும் சதீஷ் ஆகியவர்களை கைது செய்து சிவகாஞ்சி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். செல்வம் மற்றும் சதீஷ் மீது மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 66

0

0