கடனை திருப்பி செலுத்தாத மகனால் பெற்றோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கும்பல் : இருவரும் மருத்துவமனையில் அனுமதி

Author: kavin kumar
19 January 2022, 1:36 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொடுத்த கடனை திருப்பி செலுத்த சொல்லி முதியவர்களை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா குழந்தையின் கவுண்டன் பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி. இதே பகுதியில் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் செல்வக்குமார் ராமேஸ்வரம் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாகவும், கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறி சிவகுமார், அவரது மாமனார் காளிமுத்து மற்றும் அவரது உறவினர்கள் தோட்டத்தில் தங்கி உள்ள கருப்பசாமியிடம் உனது மகன் கடன் வாங்கிவிட்டு கடன் கொடுக்க வில்லை உடனடியாக வட்டியையும், கடன் வாங்கிய பணத்தையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி தனது மகன் ஊருக்கு வந்தவுடன் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து கருப்பசாமி மற்றும் அவரது மனைவியை சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கூச்சலிட்ட நிலையில், அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் பலத்த கயமடைந்தவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கருப்பசாமி பேசுகையில், “தனது மகன் கடன் வாங்கியுள்ளது தனக்கு தெரியாது. அவர் ராமேஸ்வரத்தில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் தன்னிடம் வந்து பணத்தை கேட்டார்.

தனது மகனிடம் சொல்லுகிறேன் என்று கூறியவுடன் அவர்கள் உன்னை கொலை செய்தால் தான் உன் மகன் வருவானா எனக்கூறி தாக்குதல் நடத்தினர். நாங்கள் வயதானவர்கள் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் இரு பெண்கள் மற்றும் ஆண்கள் நான்கு பேரும் சேர்ந்து எங்களை தாக்கியதில் நாங்கள் கீழே விழுந்து விட்டோம். இதில் எனக்கு கை உடைந்துள்ளது. அதேபோல் என் மனைவிக்கும் அடிபட்டுள்ளது. எங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. ஆகவே மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Views: - 339

0

0