“என்னக் கொடுமை டா இது“ சொகுசு காரில் வந்து டயர் விற்பனை கடையில் கொள்ளையடித்த கும்பல்!!

2 December 2020, 11:41 am
Tyre Shop Theft - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : வாகன டயர் விற்பனை கடையின் பூட்டை உடைத்து சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான டயர்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பன்பாக்கம் பகுதியில் சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தேவா என்பவர் வாகன டயர் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம கும்பல்  கடையில் அடுக்கி வைத்திருந்த 7 லாரி டயர்கள், 5 கார் டயர்கள், 4 இருசக்கர வாகன டயர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்து  50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டயர்களைத் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து அவர் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அப்பகுதியில் உள்ள  சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது சொகுசு காரில் வந்த கும்பல் கடையின் முன் காரை நிறுத்திவிட்டு பூட்டை உடைத்து டயர்களை திருடிய சம்பவம் சிசிடிவி கேமராவில்  பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கண்காணிப்பு கேமரா பதிவினை கொண்டு கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்

Views: - 0

0

0