‘கல்யாண பெண்ணை காரில் கடத்திய கும்பல்‘ : மதுரையில் சினிமா பட பாணியில் நடந்த சம்பவம்!!

Author: Udayachandran
2 October 2020, 11:47 am
Madurai Bride Kidnap - updatenews360
Quick Share

மதுரை : அலங்காநல்லூரில் திருமணம் நிச்சயிக்கபட்ட நிலையில் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியரை காரில் கடத்திச் சென்ற மர்மகும்பல் குறித்து போலீசார் விசார் காரில் கடத்தல் மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய ஊர்சேரி பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகள் சங்கீதா (வயது 21) அலங்காநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் வருகிற 30ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு பணி முடிந்து தனது சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் காரில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சகோதரனை தாக்கிவிட்டு சங்கீதாவை காரில் கடத்தி சென்றது. உடனடியாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட சம்பவத்தை கூறி போலீசார் காரில் கடத்திய மர்ம நபர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்

இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்க கோரி உறவினர்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பானது.

Views: - 53

0

0