விலாசம் கேட்பது போல நடித்து பிரபல ரவுடியை தீர்த்துக் கட்டிய கும்பல் : செங்கல்பட்டில் பயங்கரம்!!

21 November 2020, 3:16 pm
Rowdy Murder - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : விலாசம் கேட்பது போல நடித்து பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் விமல் என்கிற விமல்குமார் (வயது 38). இவர் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் பல்வேறு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இரவு 10 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த விமல்குமாரை விலாசம் கேட்பதுபோல் வந்த மர்ம நபர்கள் இருச்சக்கர வாகனத்தில் அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.

விமல் குமார் தப்பி செல்ல முயன்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விமல் குமாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் விமல்குமார் சம்பவ இடத்திலேயே பாலினார். இதனைக் கண்ட மக்கள் செங்கல்பட்டு நகர காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விமலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 5நாட்களுக்கு முன்பு சிங்கபெருமாள்கோவில் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யபட்டதை தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Views: - 1

0

0