ஜெயலலிதா வேடமணிந்து வந்த சிறுமி : அமமுக வேட்பாளரின் நூதன வேட்பு மனுத் தாக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 5:12 pm
Jayalalitha Pose Child -Updatenews360
Quick Share

கோவை : மக்களால் நான் மக்களுக்காகவே நான் நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என ஜெயலலிதாக கெட்டப்பில் களத்தில் தேர்தல் களத்திற்கு வந்த சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனுவை அளித்து வருகின்றனர். 90 வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான நாபிக் வேட்பு மனு தர தனது மகள், ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.

முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்தபோது பச்சை புடவையுடன் பாதுகாப்பு வீரர்களுடன் வலம் வருவது போன்ற தோரணையில் அவரது மகள் வேடமணிந்து வேட்புமனு தர தெற்கு மண்டல அலுவலகத்திற்கு வேட்பாளர் நாபிக் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 359

0

0