பிறந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் அழுத்தி கொலை செய்த இளம்பெண் : காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

2 November 2020, 10:54 am
Infant Murder - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : பிறந்து சில மணி நேரமே ஆன ஆண்குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து மருத்துவமனையில் உள்ள கழிவறையில் போட்டு அமுக்கி சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மாதா கோவிலில் வசிப்பவர் ஆரோக்கியம். இவருடைய மகள் குஷ்பு ( வயது 24). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி என பெற்றோரிடம் கூறி வந்தார். நேற்று வயிற்று வலி அதிகம் எனக் கூறி வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏபிஜே என்ற தனியார் மருத்துவமனையில் சென்று பரிசோதனை மேற்கொண்டார் .

குஷ்புவை பரிசோதித்த டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு குஷ்புக்கு ஆரோக்கியமாக குழந்தை பிறந்துள்ளது . குழந்தையும் தாயம் ஆரோக்கியத்துடன் காணப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் சென்று வெஸ்டன் டாய்லட்டை சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது டாய்லெட்டின் உள்ளே விரல்கள் ஆடியதால் பயத்துடன் அலறியடித்து கூப்பாடு போட்டனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து என்னவென்று பார்க்கும்போது அது ஒரு பச்சிளம் குழந்தையின் கை என தெரியவந்தது. மருத்துவமனை ஊழியர்கள் பின்னர் அந்த பச்சிளம் குழந்தை வெஸ்டன் டாய்லெட்லிருந்து இருந்து வெளியே எடுத்தனர்.

அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து சில மணிநேரங்கள் ஆகியிருக்கலாம் என தெரிவித்தனர். டாய்லெட்டில் குழந்தையைப் போட்டு அழுத்தி கொல்ல துணிந்த யார் என அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் .

அதில் ஓர் இளம் பெண் வெளியே செல்வது தெரிந்தது. பின்னர் மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை கவனிக்கும்போது அந்தப் பெண் குஷ்பு என்பதும் மாதா கோவில் பகுதியில் இருந்து வந்து நேற்று சிகிச்சையை மேற்கொண்டவர் என்பது தெரியவந்தது .

பின்னர் மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .அதன்பேரில் காவல்துறையினர் வந்து பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு குஷ்புவைப் பற்றி விசாரணை செய்தனர் .அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது .

குஷ்பு என்பவர் திருமணமாகாமல் யாருடனோ தொடர்பு வைத்து அதன்மூலம் கர்ப்பமாகி அது வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டில் வயிற்றுவலி எனக்கூறி வந்தவர் நேற்று வயிற்றுவலி கூடுதலாகவே தனியார் மருத்துமனையில் சேர்ந்து பிரசவம் முடிந்த நிலையில் ஈவு இரக்கம் இல்லாமல் பச்சிளம் குழந்தையை வெஸ்டர்ன் டாய்லெட்டில் கொலை செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பல இளம் தம்பதிகள் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் 24 வயதான குஷ்பூ என்ற இளம்பெண் மிகக் கொடூரமாக மனசாட்சியே இல்லாமல் பச்சிளம் குழந்தையை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குஷ்புவை கைது செய்தனர் . மேலும் உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தினால் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

Views: - 26

0

0