சிறுமியை அவருடைய தாயின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
Author: kavin kumar8 December 2021, 8:33 pm
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை அவருடைய தாயின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் வினோத்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை அச்சிறுமியின் தாயின் உதவியுடன் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமி குழந்தைகள் உதவி எண்ணிற்கு தகவல் அளித்ததின் பேரில் போலீசார் அச்சிறுமியை மீட்டனர். இதனையடுத்து அச்சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வினோத்குமாரை கடந்த மாதம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி வினோத்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லபட்டார்.
0
0