புதுச்சேரி : உக்ரைனில் சிக்கி உள்ள மாணவர்களை மீண்டும் புதுச்சேரி அழைத்து வருவதற்கான செலவை அரசே ஏற்கும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. 86 ஆயிரத்து 801 குழந்தைகளுக்கு 453 மையங்களில் 870 குழுக்களைக் கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காலை 7 மணியிலிருந்து மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெறும் அனைத்து மருத்துவமனைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெரிய மார்க்கெட், மணக்குள விநாயகர் கோயில், மாநில எல்லைகளில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தினர். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் மீட்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடைபெற்று வருவதாகவும், மாணவர்களை மீட்டு மீண்டும் புதுச்சேரி அழைத்து வரும் செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.