ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது:தமிழக சட்டத்துறை அமைச்சர் பேட்டி

Author: Udhayakumar Raman
18 October 2021, 10:32 pm
Quick Share

கோவை: பாஜக நிர்வாகி ஹெச் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது என்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கோவை மத்திய சிறையில் இன்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டு சிறை கைதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கான இடமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. சிறைக்கு வருபவர்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகள் அளிக்கபட்டு சிறையில் இருந்து வெளியில் செல்கையில் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருவாய் ஈட்டும் வகையில் அமைந்துள்ளது. 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்கள் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கபட்டுள்ளது. இது தொடர்பக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

விரைவில் தகுதியான நபர்கள் விடுதலை செய்திட நடவடிக்கைகள் எடுக்கபடும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் அக்கறை கொண்டு தமிழக அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.முன்னால் முதலமைச்சர் கருணாநிதி இங்கு செம்மொழி பூங்கா அமையும் என தெரிவித்து இருந்தார். கோவை மத்திய சிறைச்சாலை இட மாற்றம் குறித்து அரசின் கவனதிற்க்கு கொண்டு செல்லபட்டு முதலமைச்சரின் முடிவுக்கு விடபட்டு உள்ளது. தமிழக சிறைகள் அனைத்தும் புதுப்பிக்கபட்டு நவீன மயமாக்கபட வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணமாக உள்ளது.திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம், அதற்கான இடங்கள் தேர்வு செய்யபட வேண்டும்.

மத்திய சிறைச்சாலை மாற்றபடும் பட்சத்தில் இந்த இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கபடும். புதிய சிறைச்சாலை அமைந்திட இடம் கிடைப்பது கடினம். செம்மொழி பூங்காவிற்காக இந்த இடம் மாற்றபடாது.அனைத்து மத்திய சிறைச்சாலையில் திறந்த வெளி சிறைச்சாலை உருவாக்கிட வேண்டும் என்பது அரசின் நோக்கம் எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும்.8,10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் எழுத சிறைவாசிகள் அனுமதிக்கபட்டு வருகின்றனர். அதற்கான உரிய பயிற்ச்சிகள் வழங்கபடுவருகின்றன. கல்லூரி படிப்புகளுக்கு தேவையான பயிற்ச்சிகள் பெறவும் ஏற்பாடுகள் செய்யபடுகிறது.

14 ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கபட்ட சிறைவாசிகளுக்கு 10 ஆண்டுகள் நிறைவு செய்து நன்னடத்தை காரணமாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நிபந்தனைக்கு உட்பட்டு மற்ற கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அரசு மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளி சோதனை என்பது அரசின் முடிவு. அது குறித்து பதில் அளிக்க முடியாது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஹெச் ராஜா மீது அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பினையில் வர முடியாத பிடிவாரண்டை நீதிமன்ற உத்தரவு போலீசாருக்கு கிடைக்க பெற வேண்டும். ஹெச் ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 196

0

0