பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா உள்ளிட்ட மூவர் கைது…!!

Author: Udayaraman
3 August 2021, 9:48 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே சொந்த தாத்தாவே பேத்தியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பொன்னிக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், பொன்னி இறந்துவிட, ராஜா பிள்ளைகளை விட்டுவிட்டு, பெங்களூரில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர்களது இரண்டு குழந்தையும் பொன்னியின் அப்பா மாயாண்டியின் வளர்ப்பில் இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மாயாண்டி தனது 15 வயது பேத்தியுடன் கடந்த 3 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பேத்தியுடன் தாத்தா தகாத உறவில் இருந்ததின் காரணமாக சிறுமி கர்பாமாகி உள்ளார். இச்சம்பவத்தை மறைக்கும் விதமாக வீட்டை விட்டு தனது பேத்தியை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொண்ட முதியவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவரின் உதவியுடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வசிக்கும், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி என்பவரிடம் கர்ப்பிணியாக இருந்த பேத்திக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளார். இதில் அச்சிறுமிக்கு, இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை முதியவர் முனியாண்டி தென்பெண்ணையாற்றில் புதைத்துவிட இந்த தகவல் ஊர்முழுக்க கசிந்துள்ளது.

இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், முதியவர் முனியாண்டி மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மீதும், சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த மனம்பூண்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 134

0

0