இடி விழுந்ததில் தீப்பிடித்து எரிந்த பச்சை மரம் : ஒரு நாள் கழித்து அடியோடு மடிந்த பரிதாப காட்சி!!

20 April 2021, 7:18 pm
tree Dead -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நேற்று பெய்த மழையின்போது இடி விழுந்ததில் பச்சை மரம் ஒன்று தீப்பிடித்து மறுநாள் கருகி சாய்ந்தது.

கோவையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையின் போது இடி இடித்ததில், கோவை சிறுவாணி செல்லும் சாலையில் காருண்யா பல்கலைக்கழகம் அருகே உள்ள மரம் ஒன்று பாதிப்படைந்தது.

இடி விழுந்ததில் நள்ளிரவிலேயே மரம் முழுவதும் தீப்பிடித்தது. தொடர்ந்து தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது. இருந்த போதிலும் மரத்தில் இருந்து புகை வெளியேறிய நிலையில் இன்று மாலை அந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது

ஒரு நாள் முழுவதும் தீயால் புகைந்து கொண்டே இருந்த மரம் இன்று அடியோடு மடிந்த சாய்ந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 45

0

0