பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய தலைமை ஆசிரியர்… செல்போனில் பேச விடாததால் ஆத்திரம்…
Author: kavin kumar8 பிப்ரவரி 2022, 4:39 மணி
திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரம் அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. அதே ஊரைச் சேர்ந்த குமார்-பிரீத்தா தம்பதியினரின் மகன் சசிகுமார் (13). அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறான். இந்நிலையில் நேற்று உடற்கல்வி வகுப்பில் விளையாடுவதற்காக அனுமதி பெற, பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணனிடம், சசிகுமார் உடன் மூன்று மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது தனது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்த தலைமையாசிரியர் மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
மாணவர்களை அழைத்து போன் கூட பேச விட மாட்டீர்களா என கூறி அடித்துள்ளார். இதில் மற்ற மாணவர்கள் சிக்காமல் ஓடிவிட்டனர். சசிகுமார் மட்டும் சிக்கியதால் பிரம்பால் கைகள் முதுகு, வயிறு ஆகியவற்றால் அடித்துள்ளார். இதனால் இரு கைகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்றிலும் முதுகிலும் அடித்ததால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்த நிலையில், பலத்த காயமடைந்த மாணவனை அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்துள்ளனர். இது சம்மந்தமாக மாணவன் சசிகுமாரின் பெற்றோர் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
0
0