கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே மனைவியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்த முதலூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 12.01.2022-ந் தேதி தனது வீட்டின் மாடியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் திருக்கோவிலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இனி வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும்,இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இன்று திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் மேற்படி குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.