Categories: தமிழகம்

எல்லாரும் பாத்துட்டாங்க.. கள்ளக்காதல் ஜோடியின் அட்டகாசம்.. கணவனுக்கு பாடை கட்டிய மனைவி..!

பெருநகர் அருகே கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்ட கள்ளக்காதலன். மனைவியின் கள்ள காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்த சம்பவத்தால் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரது மகன் ராம்குமார் (வயது 30) இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜெய சத்யா (வயது 25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ராம்குமார், ஜெய சத்யா தம்பதி இருவருக்கும் ஐந்து வயதில் ஒரு மகனும் மூன்று வயதில் ஒரு குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இவர்களது காதல் திருமணத்தை அதே பகுதியை சேர்ந்த ராம்குமாரின் நண்பர் குறளரசன் (வயது 30) முன் நின்று செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், குறளரசனுக்கும் ஜெய சத்யாவுக்கும் இடையே கள்ள காதல் மலர்ந்துள்ளது. இது அரசல் புரசலாக ராம்குமாருக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், குறளரசன் மற்றும் ஜெய சத்யா இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குறளரசன் சமூக ஊடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்து ராம்குமார் அதிர்ந்து போய் உள்ளார்.

உடனே வீட்டிற்குச் சென்று மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஜெய சத்யா முறையாக பதில் சொல்லாததால் ஆத்திரமடைந்த ராம்குமார் குறளரசனை தேடிச் சென்று அவரிடம் இதுகுறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறளரசன் ராம்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்து போன ராம்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்குமாரை மீட்ட அவரது உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுகள் செய்யப்பட்டு ராம்குமாரின் உடல் இன்று அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ராம்குமாரின் மரணத்திற்கு காரணமான குறளரசனை கைது செய்ய வலியுறுத்தி , சடலத்தை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி, ராம்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நவியது.

நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதோடு அவர்கள் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் கள்ளக்காதலியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருநகர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

8 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

9 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

9 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

9 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

10 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

11 hours ago

This website uses cookies.