அஜித் படம் வெளியான திரையரங்கம் முன்பு பெட்ரோல் குண்டு வீசியவரின் அடையாளம் தெரிந்தது : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 4:03 pm
Petrol Bomb Valimai - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படமான வலிமை வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று அதிகாலை கோவையில் திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு திரண்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், உற்சாக நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை நூறடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாகா போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த காட்சியையும் வெளியிட்டுள்ளனர். கோவையில் அஜித் படம் வெளியான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 310

0

0