விஜய் போன்ற நடிகர்களின் தாக்கம் திராவிட மண்ணில் எடுபடாது : திமுக அமைச்சர் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 7:20 pm
Vijay Minister Mano Thnagaraj - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : விஜய் உட்பட நடிகர்களின் தாக்கம் திராவிட மண்ணில் எடுபடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும் போது, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு சாதகமாக உள்ளது என்றும் நடிகர்களின் அரசியல் வருகை தமிழகத்தில் தோல்வியை தான் சந்தித்து இருக்கிறது.

ஆனால் திமுக சமூக நீதியை நிலை நாட்டி வருவதால் திமுக ஆட்சியின் போது நடிகர்களின் வருகை எடுபடாது என்றும் பேசிய அவர், நடிகர்களின் தாக்கம் திராவிட மண்ணில் எடுபடாது என கூறினார்.

தமிழக கேரள இடையே உள்ள நதி நீர் பிரச்சனையை இந்த அரசு புதிய அணுகு முறையுடன் அணுகி வருகிறது என்றும் கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும்,எனவும் கூறினார்.

Views: - 280

0

0