கூட்டணி கட்சிகள் குறித்து ஒருமையில் பேசிய விவகாரம் : ‘ஜகா‘ வாங்கிய துரைமுருகன்!!

By: Udayachandran
3 October 2020, 8:54 pm
Durai Murugan - Updatenews360
Quick Share

வேலூர் : கூட்டணி குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள வண்டரந்தாங்கல் கிராமத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி துணைதலைவரும், திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் தலைமையில் கிராம சபா கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசும் போது, திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சீட்டுகள் பத்தவில்லை என வெளியேறுவார்கள், அதே போல அங்கே உள்ள சிலரும் திமுக கூட்டணிக்கு வருவார்கள் இது சகஜம் தான் என கூறினார். அப்போதுதான் எவன் எவன் கூட இருக்கான்னு தெரியும் என பேசினார்.

இந்த பேச்சால் திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுது. யாரை சொல்கிறார்? எதற்காக சொல்கிறார் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி அவன், இவன் என்று ஏன் பேச வேண்டும், என்று பொதுவெளியில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து யாரையும் ஒருமையில் பேசவில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா

மாஸ்க் அணிந்திருந்ததால் வார்த்தைகள் தவறாக வெளிவந்திருக்கலாம் என்றும், யாருடைய உள்ளம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், திமுக பொதுச்செயலளாராக பதவியேற்றபின் எப்படி பேச வேண்டும் என்றும், என்னையே நான் மாற்றிக் கொண்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

திமுக மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை சந்திக்க தயார். எப்படி இருந்தாலும் இவைகள் அனைத்தும் 4 மாதம் தான் இருக்கும் பின்னர் அவை தூக்கி எறியப்படும் என்று கூறினார்

Views: - 88

0

0