கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்து புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் மாயனூருக்கு கொத்தனார் வேலை செய்ய வரும்பொழுது, அந்த ஊரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுடன் பழக்கமாகி இருவரும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளனர்.
கடந்த 14ஆம் ஆம் தேதி வீட்டை விட்டு இரண்டு பேரும் வெளியே சென்ற நிலையில், மணிகண்டனின் தந்தை சரவணன் லாலாபேட்டை காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்றும், இளம்பெண்ணை காணவில்லை என்று பெண்ணின் தம்பி மாயனூர் காவல் நிலையத்தில் புகார் மனு புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு 9 மணியளவில் மணிகண்டன் மற்றும் அந்த இளம் பெண்ணை மாயனூர் காவல் நிலையத்தில் வைத்து எச்சரித்து, மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால், இருவரையும் சேர்த்து வைக்க இயலாது என்று அறிவுரை கூறி அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாயனூர் வந்த மணிகண்டன் அப்பெண்ணின் வீட்டு அருகில் மாயனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்பாதையில் அடிபட்டு, இரண்டு கால்களும் முட்டியின் கீழ் துண்டாகி தலையில் அடிபட்டு சடலமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாவில் மர்மம் இருப்பதாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தான் மணிகண்டனை கொலை செய்துள்ளனர் என கூறி கரூர் – திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் பொறுமை இழந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.