தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இருப்பினும் 2026ஆம் ஆண்டில் இருந்து தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்ய இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கும் போது தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் எக்ஸ் தளத்தின் வாயிலாகவும், அறிக்கையின் வாயிலாகவும் தனது கருத்துக்களையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார் விஜய்.
மேலும் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு தொகுதி வாரியாக ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
மேலும் பல நலத்திட்ட உதவிகளும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் கடைசியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டுள்ள விஜய் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி, மாநாட்டுப் பணிகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாயிலாக மேற்கொண்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறப் போகும் இந்த மாநாட்டில் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இருக்கும் பழைய கொடியில் விஜய் படத்துடன் உன்னால் முடியும் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. தற்போது அரசியல்கட்சி என்பதால் இரண்டு நிறங்களுடன் கொடியும் வண்ணங்களின் நடுவே வாகை மலர் இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பழந்தமிழ் நூல்களில் வாகை மலர் முக்கிய இடம் பெறுகிறது. போருக்குச் சென்றவர்கள் போரில் வெற்றி பெற்று வாகை மலர் சூடி வருவதை வாகைத் திணை தொல்காப்பியத்தில் உணர்த்துகிறது.
மேலும் விஜய் என்றாலே வெற்றி என்று அர்த்தம் எனவே விஜய் படமும், வாகை மலரும் கொடியில் இடம்பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.