எனக்கு ஏன் குரல் கொடுக்கல…?? கேள்வி கேட்ட இளம் பெண்ணை ஓட ஓட விரட்டிய மாதர் சங்கத்தினர்

Author: Udhayakumar Raman
6 December 2021, 4:55 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரிடம் தனக்கும் ஏற்பட்ட அநீதிக்கும் ஏன் குரல் கொடுக்கவில்லை என வக்கீலுடன் வந்து கேள்வி கேட்ட இளம்பெண்ணை நிர்வாகிகள் ஓட ஓட விரட்டிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம் பட்டியில் இயங்கி வந்த நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கல்லூரி தாளாளரும், அமமுக பிரமுகர் ஜோதிமுருகனை நேற்று மகிளா நீதிமன்றம் இரண்டு போக்சோ வழக்கில் இருந்து ஜாமின் வழங்கியது. இதனை கண்டிக்கும் விதமாக நீதிமன்றம் முன்பாக மாதர் சங்க நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தன்னுடைய வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த ஒரு இளம் பெண் , தன்னுடைய வழக்கறிஞருடன் சென்று மாதர் சங்க நிர்வாகிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு வராத மாதர் சங்கம் மற்ற வழக்குகளில் தலையிடுவது ஏன். ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக கேள்வி கேட்ட பெண்ணையும் அவருடன் வந்த வழக்கறிஞரையும் நீதிமன்ற வளாகம் முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வழக்கறிஞறையும்,நியாயம் கேட்ட பெண்ணையும் மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களுடன் வந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தாக்க முயன்றனர். இதை தொடர்ந்து வழக்கறிஞரும் பாதிக்கப்பட்ட பெண் மாதர் சங்கத்தினருக்கு பயந்து நீதிமன்ற வளாகத்திற்குள்ளே ஓடி தஞ்சம் மடைந்தனர். நீதிமன்ற வளாகத் வளாகத்திற்குள்ளேயே மாதர் சங்கத்தினர் விரட்டி சென்று தாக்க முயற்சித்தனர். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்றம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Views: - 224

0

0