ஆட்டோ ஓட்டி சம்பாதித்த பணம்.. வயநாடு மக்களுக்காக 120 சேலைகள் வாங்கிக் கொடுத்து நெகிழ வைத்த ஓட்டுநர்!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 4:58 pm
waya
Quick Share

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டு, மீட்க பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பழனியில் அதிமுக 25 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜென்னத்துல் பிர்தௌஸ் ராஜா முகமது சார்பில் பொதுமக்கள் மற்றும் இணைந்து நிவாரண பொருட்களான அரிசி ,மளிகை பொருட்கள் , பிஸ்கட் ,சேலைகள் , துணிகள் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை சேகரித்து தங்களுடைய ஏற்பாட்டிலேயே நேரடியாக நிவாரண முகாம்களுல் நேரடியாக பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பழனியில் ஆட்டோ ஓட்டுநரான பாண்டி என்பவர் தனது குடும்பத்தின் சார்பில் சொந்த பணத்தில் 120 சேலைகளை வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் பழனி பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 296

    2

    0