கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே ஒன்றரைவயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் தாய் தந்தையை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்( 34 ) இவரது மனைவி கார்த்திகா(வயது 21) இவர்களுக்கு ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்துகொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுளாள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் குழந்தை விஷப்பொடியை சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது இதனிடையே குழந்தையின் தாய்,தந்தையை போலீசார் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
This website uses cookies.