நீட் தேர்வு குறித்து இளம் மருத்துவர் இயக்கி நடித்த திரைப்படம் : வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவித்து சாதனை!!
22 January 2021, 11:39 amதிருச்சி : நீட் தேர்வு தற்கெலையை திருச்சியில் இளம் மருத்துவர் தயாரித்து, இயக்கி நடித்த திரைப்படம் இபிகோ 306 வெளியானது.
தமிழகத்தில் நீட் தேர்வுகளால் தோல்வி அடையும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டது. இந்த கருத்தை மையமாக வைத்து இளம் மருத்துவர் ஒருவர் சினிமாவாக எடுத்துள்ளார்.
இபிகோ 306 என்ற தமிழ் திரைப்படத்திற்கு கதை எழுதி, லால்குடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான மருத்துவர் சாய் அரவிந்த் இந்த படத்தில் நடித்தும் உள்ளார்.
இந்தப்படம் வெளியாகும் முன்பே சிறந்த அறிமுக இயக்குநர் விருது உள்ளிட்ட மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இப்படம் இன்று ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படம் இயக்கப்பட்டது குறித்து மருத்துவர் சாய் அரவிந்த் பெற்றோர்கள் அனுராதா சிவக்குமார், செய்தியாளர்களை சந்தித்தனர். பெற்றோர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
ஆனால் எனது மகன் சாய் அரவிந்த் இளம் வயதிலேயே சினிமா மீது ஆர்வம் இருந்தது. ஆனால் எங்கள் எண்ணப்படி அவனை சிறந்த மருத்துவராக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.
பிளஸ் டூ படித்து முடித்ததும் பெற்றோரான எங்களுக்கும், எனது மகனுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது எங்கள் விருப்பதின் படி சிறந்த மருத்துவராக வேண்டுமெனவும், உனது விருப்பத்தின் படி சினமாத்துறையில் தடம் பதிக்க வேண்டுமென ஏற்பட்ட ஒப்பந்த த்தின்படி இரண்டையுமே என் மகன் நிறைவேற்றியுள்ளார் என பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள சிறுமயங்குடி கிராமம், திருக்காட்டுப்பள்ளி, திருச்சி தில்லை நகர் ஆகிய பகுதிகளில் இப் படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
0
0