புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.!!

Author: Poorni
5 October 2020, 5:58 pm
Quick Share

கோவை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்த்து பெற்றோர்களின் ஆதர்வோடு மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என பாஜக மாநில இளைஞரணி தலைவர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்

பஜகாவின் கோவை மாவட்ட இளைஞர் அணி செயற்குழு கூட்டம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட பொறுப்பாளர்கள்,மண்டல தலைவர்கள் கலந்து கொண்ட இதில் 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின் பேசிய மாநில இளைஞரணி துணை தலைவர் சிவசங்கரி அரசு சார்பில் வழங்கப்படும் புதிய வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கும் பணி நடைபெற்றது.

வருவதில் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு மற்றொரு விடுபட்டு இருப்பதை அறிந்து மாவட்ட நிர்வாகமும் தேர்தல் பிரிவு பொறுப்பாளர்களும் முழு கவனம் கொடுத்து அனைத்து வாக்காளர்களுக்கும் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்கும் புதிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்த்து பெற்றோர்களின் ஆதர்வோடு மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநில இளைஞர் அணி துணை தலைவர் சிவசங்கரி மாவட்ட இளைஞரணி தலைவர் மகேஷ்குமார் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் நவீன் குமார்,நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 44

0

0