கொரோனாவால் கோலத்தில் பிள்ளையார் வரைந்து வழிபட்ட தம்பதி!!
22 August 2020, 5:38 pmநீலகிரி : உதகையில் விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று வித்தியாசமான முறையில் கோலத்தில் பிள்ளையாரை வரைந்து தம்பதியினர் வழிபட்டனர்.
இன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை சிலைகள் பிரதிஷ்டை கூடாது எனவும் விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபட்டு கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் ஏதும் பிரதிஷ்டை செய்யாமல் பொதுமக்கள் அவரவர்களது வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.
இதில் உதகை அருகே உள்ள சாம்ராஜ் தேயிலைத் தோட்ட பகுதியில் உள்ள தம்பதியினர் கோலம் மூலம் பிள்ளையாரை வரைந்து கூழாங்கல்லில் விநாயகர் உருவத்தை வரைந்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் சிலை வைத்து வீடுகளில் வழிபடுவதாகவும் இந்தமுறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோலம் மூலம் விநாயகரை வரைந்து வழிபட்டதாக தெரிவித்தனர் .