“குப்பை“க்கு இனி “குட்பை“!! வீணாகும் பிளாஸ்டிக்கால் உருவான தடுப்பு சுவர்!!

28 August 2020, 5:49 pm
Recycling - Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூர் நகராட்சி சார்பில், வீணாகும் பிளாஸ்டிக் மூலம் அமைத்த தடுப்புச்சுவர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில் உள்ள குப்பைகளை ஒட்டுப்பட்டறை பகுதியில் உள்ள குப்பை குழியில் கொட்டப்படுகின்றன.

இங்கு ‘குப்பை’ கூள மேலாண்மை பூங்காவில், தன்னார்வ அமைப்பு மூலம் பிரிக்கப்படும் வீணாகும் பிளாஸ்டிக் பொருட்கள் பேலிங் இயந்திரம் மூலம் 200 கிலோ பிளாஸ்டிக் ஒரு பிரிவாக கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கம்ப்ரஸ் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு குன்னூர் நகராட்சி மூலம் உழவர் சந்தை அருகேயுள்ள பூங்காவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

முதன் முறையாக, வீணாகும் பிளாஸ்டிக் மூலம் தடுப்பு சுவர் அமைக்கும் இந்த சோதனை முயற்சியை தொடர்ந்து மண்சரிவு, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தொடர ஆலோசிக்கப்பட உள்ளது.

Views: - 26

0

0