நானும் படிக்கணும்..! பள்ளிக்கு வந்த காட்டெருமையால் பீதி..!!

14 February 2020, 7:33 pm
Nilgiri Bison -updatenews360
Quick Share

நீலகிரி : மலைபிரதேசங்களில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் கஷ்டத்தை அனுபவதித்து தான் வருகின்றனர்.

விலங்குகள் அதிகமாக உள்ள பகுதிகளில், குடியிருப்புகள் வணிக வளாகங்கள் இருந்தால் பிரச்சனைதான். அப்படித்தான் பள்ளிக்கூட வளாகத்தில் புகுந்த காட்டெருமையால் மாணவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஜாலியாக நானும் படிக்க வரேனு கிளம்புனா மாதிரி, உள்ளே வந்த காட்டெருமையை அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் துரத்த முற்பட்ட போது, அது திரும்பி பார்த்ததும் அவர் அங்கிரந்து நகர்ந்து விட்டார்.

எனினும் அந்த எருமை வளாத்தை சுற்றிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதில் இன்னொரு விஷயம் என்றால் அந்த காட்டெருமைக்கு ஒரு கண் தெரியாது என்பதுதான். இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.